சினிமா செய்திகள்

நயன்தாரா நிகழ்ச்சியும் சர்ச்சையும்

பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் சனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் விழாவில் ஆற்றிய உரையில்…

என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விசயங்கள் உண்டு.அது தன்னம்பிக்கையும் சுயமரியாதையும். இந்த இரண்டு விசயங்கள் இருந்தால்போதும் எவ்வளவு நடந்தாலும் யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும், இந்த இரண்டு விசயங்களை விட்டுவிடக்கூடாது. இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் போதும். அதற்கு மேல் வேறு எதுவும் பெரிது கிடையாது.

இந்த தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்.

அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை வரும். இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்றார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக பல எதிர்மறை தகவல்களும் உலா வருகின்றன.சமூக வலைதளங்களில் நிறைந்து கிடக்கும் அவற்றில் ஓரு பதிவு….

சமீபத்துல ஒரு எம் எல் எம் மாதிரியான ஒரு கம்பெனிய நயன்தாரா தொடங்குச்சி.. நியாபகம் இருக்கா..?
.
சானிடரி நாப்கின், சோப்பு, கிரீம்னு அதுல இருக்கு.. அது பெரும்பாலும் கடைகள்ல வித்து பாத்ருக்க மாட்டீங்க..
.
ஆமா இது எம் எல் எம் அடிப்படைல தான் நடக்குது..
.
எம் எல் எம்னா என்னானு தெரியாதவங்க தெரிஞ்சிகோங்க..
.
“சதுரரங்க வேட்டை” படத்துல கக்கூஸ் தண்ணிய புடிச்சி கங்கை தண்ணீர்னு 1000ரூவாக்கு விப்பாங்களே அதே மாதிரி தான்..
.
ஆள் புடிச்சி விடுறது.. உங்களுக்கு கீழ ரெண்டு பேரு.. அவங்களுக்கு கீழ ரெண்டு பேருனு பொருள் வாங்க வாங்க பணம் வரும்னு உருட்டுவாய்ங்க..
.
அது மாதிரி போயி ஏமாந்த கிராமத்து மக்கள் ஏறாலம்.. ஏன்னா பெரிய விவரம் தெரியாம காச குடுத்து ஏமாந்துருவாங்க..
.
சரி.. இப்ப மேட்டருக்கு வருவோம்..
.
இது நடத்துறதும் அது மாதிரியான ஒரு லிங்க் மார்கெட்டிங் தான்..
.
இதுல இதோட சினிமா கவர்ச்சியால மக்கள் ஈசியா சேந்துகிறாங்க..
.
அப்பிடி சேர்ந்தவங்கள எல்லாம் ரெண்டு நாள் முன்னாடி ஒரு ஹால்ல மீட் பன்றதா சொல்லி வர சொல்லிருகாங்க..
.
காலை 10 மணிக்கு ஆரம்பிச்சி மதியம் 1 மணிக்கு முடியும்னு பத்திரிக்கை அடிச்சிருகாங்க..
.
அதுலயே வரவங்க எல்லாரும் அவங்க கூட போட்டோ எடுத்துகலாம்னு மென்சன் பன்னி பத்திரிக்கை அடிச்சிருக்காங்க..
.
இவங்க கூட போட்டோ எடுக்குற ஆசைல எல்லாரும் காலைல 9 மணிக்கே வந்து உக்காத்துருக்காங்க..
.
நேரம் ஆகி ஆகி.. மதியம் 2 மணிக்கு தான் புருசன் & பாடி கார்டு புடை சூல வந்துருகாங்க அம்மனி..
.
வந்த உடனே சும்மா பேச்சுக்கு ரெண்டு வார்தை பேசிட்டு உக்காந்துருக்காங்க.. மிச்சத்த எல்லாம் மார்கெட்டிங் மேனேஜர்கள் தான் பேசிருக்காங்க..
.
6 மணிக்கு புருசன் கூட கிளம்பிருகாங்க.. மீட்டிங் முடிஞ்ச நிலைல “தேசிய கீதம்” பாடிருக்கு..
.
எல்லாரும் எந்திரிச்சி நின்னுகிட்டு இருக்கும் போது.. இந்த புருசன் பொன்டாட்டி மட்டும் தேசிய கீதத்த கூட மதிக்காம எந்திரிச்சி நடந்து வேற ரூம்க்கு போயிடாங்க..
.
போட்டோ எடுக்கலாம்னு வந்தவங்களயும் மதிக்கல.. கேட்டதுக்கு “போட்டோ தான எடுக்கனும்.. சரி வாங்க”னு புருசன் காரன் என்னமோ பிச்ச போடுற மாதிரி தோனில கூப்பிட்டு அதுவும் 4பேரு கூட மட்டும் எடுத்துட்டு போயிடாங்க..
.
தமிழ்நாட்டுல இருந்து வெவ்வேரு மாவட்டத்துல இருந்து வந்தவங்க
காலைல 9 மணிக்கு வந்து மாலை 7 மணி வரைக்கும் அங்கயே உக்காந்து இருந்தவங்களுக்கு சாப்பாடு கூட போடல.. எல்லாம் அவங்க காச போட்டு வெளிய போயி சாப்பிட்டு இருக்காங்க.. ஒரு டீ காபி கூட குடுக்கலயாம்..
.
சொந்த காச போட்டு இதுகள சினிமாவுல போயி பாக்குறீங்களா..? அதோட விட்ரனும்.. இது மாதிரி கவர்ச்சிக்கு ஆசை பட்டு சொந்த காச போட்டு போயி அசிங்க படுறவங்களுக்கு இதெல்லாம் வேணும் தான்…
.
எனக்கு என்ன டவுட்டுனா.. இப்புடி ஒரு எம் எல் எம் கம்பெனி நடத்துறாங்க.. அதுலயும் இத்தன அட்டூழியம்.. யாரும் பெருசா கண்டுக்க மாட்றாங்க..
.
இதுல முக்கியமா மொக்க வாங்குனது அந்த கம்பெனிகாவ இன்ஸ்டாவுல ஊதுர இன்புலூவன்சர்கள் தான்..
.
காலைல இருந்து உக்காந்ததது அவங்களும் தான்.. அவங்களும் பொத்திட்டு இருகாங்க..
.
புருசன் காரன் என்னடானா அரசு பில்டிங்க எல்லாம் விலை பேசுறான்..
.
நாட்டுல இருக்குற எத்தனையோ பெரிய நடிகர், நடிகைகள் செய்யாத அட்டூழியத்த எல்லாம் இந்த ஜோடி செய்யுது..
.
எதையுமே வெளிய கொண்டு வரதில்ல.. ஒரு அரசியல் பெரும் புள்ளி பின்னாடி இல்லாம இவங்களால இந்த ஆட்டம் போட முடியுமா..??

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Posts