சினிமா செய்திகள்

பத்ம விபூஷண் விருது பெற்றார் இளையராஜா

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மார்ச் 20,2018) மாலை டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத்தலைவர் கோவிந்த் வழங்கினார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

Related Posts