சினிமா செய்திகள்

பாலா இயக்கும் படத்தில் கவுதமி மகள் கதாநாயகியா?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி.

இந்தப் படம்,வர்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

நாச்சியார் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கவுதமி மகள் சுபலட்சுமி நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இச்செய்தியை உறுதியாக மறுத்துள்ளார் நடிகை கவுதமி.
என் மகள் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன். சுபலட்சுமி தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடிப்பதாக இல்லை. உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி என்று ட்விட்டரில் எழுதியுள்ளார் கவுதமி.

Related Posts