காலா டீசர் விமர்சனம்
மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் இரவு பனிரெண்டு மணிக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. காலா டீசர் எப்படி இருக்கிறது?
கபாலி படம் போலவே பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில்,
‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கறுப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற பதில் சமுத்திரக்கனியின் குரலில் ஒலிக்கின்றது.
இந்த தேசம் சுத்தமா, புனிதமா மாறனும்ன்னு விரும்புறேன் என்ற நானா படேகரின் வசனமும், ரஜினியின் ‘கறுப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் வண்ணமயமா இருக்கும்’ என்கிறார் ரஜினி.
“வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா வாங்கலே” என்று சொடக்கு போட்டு ரஜினி கூப்பிடும் ஸ்டைல், அவரது ரசிகர்களுக்கு விருந்து.
சந்தோஷ் நாராயணன் இசையில் யோகி பி குரலில்,
வா உன்னையும் மண்ணையும் வென்றுவா
தீராத ஓர் தேவையை கொண்டுவா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்
கற்றவை பற்றவை
என்ற பாடல் நெருப்புடாவை நினைவுபடுத்துகிறது.
இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்க பார்த்தது இல்லயில்ல’ என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ரஜினி வசனம் பேசும் ஸ்டைல் ரசிகர்களைக் கவரும்.
அசரவைக்கும் பின்புலம், ஆர்ப்பாட்டமான ஒளிப்பதிவு, அதிரடியான பின்னணி இசை, உழைக்கும் மக்களுக்கான கருத்துக்களுடன் கூடிய வசனங்கள், திருநெல்வேலி வட்டார வழக்கு ஆகியன காலா பட டீசருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.










