September 20, 2026
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த விஷ்ணுவிஷால் – காரணம்?

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேப்டன் மில்லருக்கு அடுத்து தனுஷ் 50 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தை தனுஷே இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையரை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் தற்போது நடந்துவருகிறதாம்.

இந்தப்படத்தில் இரண்டு வில்லன்கள் என்றும் அந்த வேடங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வேடங்களில் நடிக்க நடிகர் விஷ்ணுவிஷாலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவிருக்கிறார்கள் என்கிற பேச்சுவந்தது.

ஆனால், இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.

விஷ்ணுவிஷால் இப்போது தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக தனுஷ் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம்.

இதனால், விஷ்ணுவிஷாலுக்குப் பதிலாக நடிகர் சந்தீப்கிஷன் நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப்படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்ட விஷ்ணுவிஷால், இப்போது லால்சலாம் படத்தில் நடிப்பதைக் காரணம் காட்டி நடிக்க மறுத்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளதாம்.

தனுஷ் படத்தில் நடிக்கவேண்டாமென ஐஸ்வர்யா கேட்டுக்கொண்டார் என்றும் அதை ஏற்றுக்கொண்ட விஷ்ணுவிஷால், தனுஷ் படத்தை நிராகரித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

உண்மையிலேயே தேதி இல்லாமல் விஷ்ணுவிஷால் நடிக்க மறுத்திருக்கலாம், ஆனால், ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க மறுத்ததால் இம்மாதிரி செய்திகள் உலா வருகின்றன.

Related Posts