எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல், ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த ஒரேநடிகை ஸ்ரீதேவி – படங்களுடன்
நடிகை ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

sridevi-with-m-g-r
1969 ஆம் ஆண்டு துணைவன் படம் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, தமிழ்த்திரையுலகின் மூன்று தலைமுறை சூப்பர்ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர்.
மூத்த தலைமுறை சூப்பர்ஸ்டார்களான எம்ஜிஆருடன் நம்நாடு, சிவாஜியுடன் பாபு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருகிறார்.

sridevi shivaji
நாயகியான பிறகும் சிவாஜி நடித்த விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களில் அவருடன் நடித்திருக்கிறார்.
அடுத்த தலைமுறை சூப்பர்ஸ்டார்களான கமல், ரஜினி ஆகியோரோடு நிறையப் படங்களில் இணையாக நடித்தவர்.
1976 இல் ஸ்ரீதேவி நாயகியாக நடித்த முதல்படம் மூன்றுமுடிச்சு வெளியானது. அப்படத்தில் ரஜினி, கமல் ஆகிய் இருவருமே இருந்தார்கள்.

sridevi kamal
அதன்பின் கமலுடன் 21 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
16 வயதினிலே, மூன்றாம்பிறை, வறுமையின் நிறம் சிரிப்பு ஆகிய படங்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை.

sridevi rajini
ரஜினியுடன், காளி, தர்மயுத்தம், போக்கிரி ராஜா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

sridevi vijay
தற்போதைய தமிழ்த்திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். அந்தப்படத்தில் அவர் வில்லி. அதுதான் அவர் நடித்த கடைசித் தமிழ்த்திரைப்படம்.

sridevi ajith
ஸ்ரீதேவியின் மறுபிரவேசமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார்.
இப்படி மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவிதான்.











