விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா – பிரபலங்கள் வாழ்த்து
தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன்.
அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அவர் நடிக்கும் முதல் படத்தின் பெயர் ஹிட்லிஸ்ட். இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார் தனது ஆர்கே செலுலாய்ட்ஸ் (RK Celluloids) நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். தெனாலி, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களுக்குப் பிறகு,இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.
இப்படத்தை, புதிய இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.
ஹிட்லிஸ்ட் திரைப்பட அறிமுக விழா மற்றும் படத்தொடக்கவிழா சென்னையில் உள்ள நட்சத்திரவிடுதியொன்றில் இன்று நடந்தது.
இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், தேனப்பன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்,
எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்,சரிதா,கலைராணி உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன் படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.
இப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது.
சரத்குமார் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.











