வணங்கான் வாடிவாசல் படங்களுக்கு முன்னதாக இன்னொரு படம் – சூர்யா புதுமுடிவு
சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.
இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருந்தார்.
ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்கிறார்கள்.எப்போது வேண்டுமானாலும் சூர்யாவின் தேதிகள் கிடைத்துவிடும் அதற்குத் தயாராக இருங்கள் என்று சொல்லப்பட்டதால் இயக்குநர் ரவிக்குமார் குழு படப்பிடிப்புக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏன் இந்தத் திடீர்மாற்றம்?
இயக்குநர் பாலா இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை படத்தை முடிப்பதற்கே இன்னும் சில மாதங்கள் ஆகும்.
எனவே, சிறுத்தைசிவா படப்பிடிப்புக்கு இடையிலோ அல்லது அதை முழுமையாக முடித்தபின்புமோ சும்மா இருக்கவேண்டாம் என்பதால் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
அதன் காரணமாகவே இந்த மாற்றம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.











