ஜான் ஆகிய நான் – திரைப்பட விமர்சனம்
சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமுதாய விரோதக் கூட்டங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன?ஊடகங்களில் வெளியாகும் பொய்கள் எப்படி சில சமயங்களில் உண்மையாகி விடுகின்றன? ஆகிய ஆழமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் படம்தான் ஜான் ஆகிய நான்.
ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்தக் கொலைகளின் பின்னணி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த டொச்சு பாண்டி (அருள் அன்பழகன்) விவரிக்கிறார்.
இதனால், அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமிக்குச் சிக்கல்.அதனால் வெகுண்டெழும் நாயகன், அருள் அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை வெளிப்படுத்துவதோடு,கொலைகளின் உண்மையான பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் படம்.
எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாக அதுவும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அப்பு கே.சாமி. ரிக்கவரி பாண்டி மற்றும் காவல் அதிகாரி ஜான் ஆகிய இரண்டு வேடங்களிலும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
ரிக்கவரி பாண்டியாக நகைச்சுவை, காதல் ஆகியனவற்றில் தன் திறமையைக் காட்டும் நாயகன், ஜான் என்கிற காவல் அதிகாரி வேடத்தில் மிடுக்குடன் இருக்கிறார்.
நாயகியாக, ஹேமா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் நக்ஷத்ரா ராவ் எளிய அழகி. படத்தில் அவருக்கு வாய்ப்பும் மிக எளிதாக இருப்பது சோகம்.
டொச்சு பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கும் அருள் அன்பழகனுக்கு, அப்பாவி போல் வந்து அடப்பாவி எனச் சொல்லும் வேடம்.
நகைச்சுவைக்காக பவர் ஸ்டார் சீனிவாசனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அது தெரியாமல் நடித்து சோதிக்கிறார்.
ராஜநாயகம் என்ற பெரிய மனிதர் வேடத்தில் நடித்திருக்கும் ஜாக்சன் பாபு, தனது இயல்பான வில்லத்தனத்தால் கவனிக்க வைக்கிறார்.
மருத்துவராக வரும் நிழல்கள் ரவி, ஜான் என்ற தொழிலதிபராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா ஆகியோர் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கவியரசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 311 ஸ்டுடியோஸின் இசை, கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.
எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, வழக்கமான பழிவாங்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார். சமூக அக்கறையோடு வசனங்கள் எழுதியிருக்கிறார்.
பின்குறிப்பு : இத்திரைப்படத்தை உங்கள் கைபேசி அல்லது உங்கள் வீட்டு தொலைக்காட்சி ஆகியனவற்றில் இலவசமாகப் பார்க்கலாம்.அதற்கு Google Play Store இல்
App link : https://play.google.com/store/apps/details?id=com.tamilottplatdorm.app
User Detailsuser name : preview@311channel.compassword : 270820222000
App ஐ டவுன்லோட் செய்து, அதில் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் Free purchase coupon code : 5555 ஐ பயன்படுத்தினால் இலவசமாக ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தைப் பார்க்கலாம்.
311 மொபைல் ஆப் மற்றும் 311channel.com இணையத்தில், Free purchase coupon code : 5555 என்ற எண்ணை பயன்படுத்தியும் ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம்.










