சினிமா செய்திகள்

சொதப்பிய விஷால் கடுப்பில் ரிதுவர்மா

விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிப்பு எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்.

இப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

சுமார் இருபதுநாட்கள் படப்பிடிப்பு என்று திட்டமிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினார்களாம். இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை ரிதுவர்மா சென்னை வந்திருந்தார்.

இருபதுநாட்கள் என்று திட்டமிடப்பட்ட அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டுநாட்களோடு நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

காரணம், மூன்றாவதுநாளிலேயே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டாராம் விஷால். இதனால் நாயகி ரிதுவர்மாவும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் விடுதி அறையிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்ததாம்.

இதனால் அவர் உள்ளிட்டு எல்லோரும் விஷால் மேல் கடுப்பில் இருக்கிறார்கள்.

அடுத்து என்ன? என்றால், வேறேன்ன? விஷால் எப்போது படப்பிடிப்புக்கு வருகிறாரோ அப்போது படப்பிடிப்பு தொடங்கும், அப்போது மற்ற நடிகர் நடிகைகளின் தேதிகளை வலுக்கட்டாயமாக வாங்கியாக வேண்டும் என்பதுதான் கஷ்டம் என்கிறது படக்குழு.

Related Posts