விக்ரம் படத்தில் சூர்யா – ஆச்சரிய தகவல்
கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் ஏற்கெனவே பெரும் நடிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இறுதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடிகர் சூர்யாவும் அவர் தம்பி கார்த்தியும் நடித்திருக்கிறார்களாம்.
கதைப்படி அவர்கள் வருவது முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள். இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்பதால் இந்தத் தகவலை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்கள் இருவரும் கைதி 2 படத்துக்காக மீண்டும் இணையவிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.











