காவி கிழிகிறது கறுப்பு சிவப்பு தெரிகிறது – பீஸ்ட் முன்னோட்ட சர்ச்சை
நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 2,2022) மாலை ஆறு மணிக்கு படத்தின் முன்னோட்டம் வெளியானது.
வெளியானது முதலே பரவலான ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருங்கே சம்பாதித்துவருகிறது அந்த முன்னோட்டம்.
முன்னோட்டத்தில்,
பயம்மாருக்கா இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்
நீங்க பண்ற இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது
என்று விஜய் பேசும் வசனங்கள் மற்றும் காவி வண்ணம் பூசப்பட்ட பலூன் ஒன்றை விஜய் கத்தியால் கிழிப்பது போன்ற காட்சி, விஜய் கையில் வைத்திருக்கும் சிறு கோடரியில் கறுப்பு சிவப்பு வண்ணம் ஆகியனவற்றையும் சுட்டிக்காட்டி பலர் பாராட்டிக் கொண்டிருக்க அதையே சொல்லி சிலர் விஜய்யைத் திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, யோகிபாபு நடிப்பில் வெளியான கூர்கா படத்தின் முன்னோடமும் பீஸ்ட் படத்தின் முன்னோட்டமும் ஒரேமாதிரி இருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தப்படத்தின் முன்னோட்டத்தை ஏராளமானோர் தேடிப்பார்த்து வருகிறார்கள்.
பீஸ்ட் முன்னோட்டம் காண…











