சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

விஜய்சேதுபதி இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் காத்துவாக்குலரெண்டுகாதல், கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகியவை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன.

இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கவிருக்கிறாராம்.

விஜய்சேதுபதியின் 96 படத்தை விநியோகம் செய்த லலித்குமார், அதன்பின் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார். இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் லலித்குமார்தான் தயாரிக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சமுத்திரக்கனி நடித்த ரைட்டர் படத்தின் இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறாராம்.

நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேடல் நடந்துகொண்டிருப்பதாகவும் அவை முடிவானவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts