விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய்சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல தமிழ்ப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இன்று விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியில் அந்தாதூன் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்ரீராம்ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினாகைஃப் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் பெயர் மெரி கிறிஸ்துமஸ்.
கிறிஸ்துமஸ் நாள் என்பதால் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது என்று சொல்லப்படுகிறது.
அப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் , கத்ரினா கைஃப் ஆகியோருடன் விஜய்சேதுபதி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மெரி கிறிஸ்துமஸ் அறிவிப்பும் இப்புகைப்படமும் வெளியானதும் விஜய்சேதுபதி இரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகிறார்கள்.











