சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன் – தெலுங்குநடிகர் நானி பேச்சு
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொண்டவருமான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.
தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.
மறுபிறவியை மையமாகக் கொண்ட இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன்னோட்ட வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில்….
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…
நானி என் தம்பி, ஒரு தமிழ்ப் படத்தோடு அவர் வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குநராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தில் நடித்தேன் அவரும் எனக்கு மகள் போலத் தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துகள். படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி பேசியதாவது….
டிசம்பர் 24 தமிழ்,தெலுங்கு, மலையாளம், க
நடிகை சாய்பல்லவி பேசியதாவது…
எப்போதுமே நான் ஒரு கதையைப் படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பலதடவை இந்தக் கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்தப் படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாகச் சொன்னார் ரொம்ப சந்தோசமாக இருந்தது. தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வை இந்தப் படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றித் தெரிந்து கொள்வதற்காக, சில விசயங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்குத் தேவையானதைச் செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் நானி பேசியதாவது….
நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷூட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லாப் பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன். தமிழ்ப் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றைப் பார்த்துத் தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாகப் போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தைச் செய்யக் காத்திருந்தேன்.
ஷியாம்சிங்காராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் எனச் சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தைக் கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
இப்படத்தின்வெற்றிக்குப்பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடைஎதுவும் மாற்றவில்லை. ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம்,
படமாக்கும் போது சிறந்த அனுபவமாக இருந்தது. கதை பெங்காலில் நடக்கும்,
படம் பார்க்கும் போது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு முழுதாகப் புரியும்.
நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது.
தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன். உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான்.
நான்நடிகர்சிவகார்த்திகேயனுடன்இணைந்து நடிக்கலாம், நல்ல கதை கிடைக்கும் போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம். கமல் சார் படங்கள் பார்த்துத் தான் வளர்ந்திருக்கிறோம் அதனால் அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப்படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











