விமர்சனம்

சின்னஞ்சிறு கிளியே – திரைப்பட விமர்சனம்

ஒரு சில படங்கள் எதிர்பாராத கதையம்சத்துடன் வந்து திகைக்க வைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கிறது சின்னஞ்சிறு கிளியே.

உலகத்தை ஆட்டிப்படைப்பவர்களின் முதன்மையானவர்கள் மருந்து நிறுவனக்காரர்கள். அவர்கள் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதைக் காட்டிலும் நோயை உருவாக்கும் கிருமிகளை முதலில் உருவாக்கி அதைப் பரப்பிவிட்டு, பின்பு அதற்கு மருந்து கண்டுபிடித்து வியாபாரத்தை விருத்தி செய்கிறார்கள்.இதற்குள் ஏராள உயிர்ப்பலிகள்,
கொடுந்துன்பங்கள். 

இவற்றை அம்பலப்படுத்தும் அதேநேரத்தில் இயற்கை மருத்துவத்தின் பெருமைகளையும் பேசியிருக்கிறது படம்.

நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், தமிழ் மருத்துவருக்கான கம்பீரத்தைக் கண்களில் காட்டுகிறார். 

நாயகியாக சாண்ட்ராநாயர், நாயகனின் தாத்தா பாட்டியாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன், குள்ளப்பள்ளி லீலா, மறைந்த நடிகர் செல்லத்துரை ஆகியோர் பொருத்தமான தேர்வுகள்.

பாண்டியன் ஒளிப்பதிவு தாழ்வில்லை. இசை மஸ்தான் காதர். பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். 

எழுதி இயக்கியிருக்கிறார் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

பட உருவாக்கம் மற்றும் திரைக்கதையோட்டத்தில் குறைகள் இருந்தாலும், குழந்தைகளின் எலும்பு மஜ்ஜையை வைத்துச் சொல்லியிருக்கும் கதை அதிர வைக்கிறது.

கொரோனா காலத்துக்கேற்ற கதை.

Related Posts