செய்திக் குறிப்புகள்

கார்த்தி படத்தில் கதாநாயகியாகிறார் இயக்குநர் ஷங்கர் மகள்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போது “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தைத் தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

இப்படத்தை முத்தையா இயக்குகிறார்.

‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) (இவர் இயக்குநர் ஷங்கர் மகள்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

aditi shankar

aditi shankar

இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையைச் சொல்லும் குடும்பத்திரைப்படமாக உருவாகவுள்ளது.
இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.

‘மாநகரம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றார்.

தயாரிப்பு:சூர்யா – ஜோதிகா.

இப்படத்தின் பூஜை செப்டம்பர் 6 ( திங்கள்கிழமை ) நடைபெறுகிறது. இம்மாதம் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Posts