September 1, 2026
கட்டுரைகள்

வைரமுத்து-வுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் தெரியுமா ?

வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக அவர் வருத்தம் தெரிவித்த பின்பும் அறிக்கைகள், போராட்டங்கள், சர்ச்சைப் பேச்சுகள் ஆகியன தொடர்வதற்கு என்ன காரணம்? என்று பலருக்கும் புரியவில்லை.

இத்தனைக்கும் திராவிட இயக்க மேடைகளில் படுமோசமாகக் கடவுளர்களை வசைபாடுவதும் அதை இவர்கள் கண்டும் காணாமல் போவதும் நடக்கிற இந்நாட்டில் வைரமுத்துவுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு எதனால்?

தமிழுக்கு ஞானபீட விருது என்பதை முடிவுசெய்துவிட்டு ஆளைத்தேடும்போது தனது பெயர் பரிசீலனை செய்யப்படும் வாய்ப்பைக்  வைரமுத்து உருவாக்கிவிட்டார் என ரகசியச் செய்திகள் சில நாட்களுக்கு முன்பு வந்தது. .

மத்திய அரசிலும் மாநிலத்திலும்  பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் பிராமணரல்லாத ஒருவர் அதைப் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்கு -செல்வாக்குக்குப் பெரும் வீழ்ச்சி என நினைத்த சிலர் பின்புலத்தில் இருப்பதாலேயே இவ்வளவு சர்ச்சைகள்.

இலக்கியம் பற்றிய கருத்தியல்களை முன்வைத்து விவாதித்துத் தடுக்க இயலாத நிலையில் ஆண்டாளை முன்வைத்து சிக்கலை உருவாக்குகின்றனர். அவருக்கு ஞானபீட விருது கிடைத்துவிடக்கூடாது என்பதே இவர்களது நோக்கம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

Related Posts