சினிமா செய்திகள்

இலட்சுமிமேனன் விதித்த நிபந்தனைகள் – அதிர்ந்த படக்குழு

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படமொன்று தயாராகிறது. அதில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக இலட்சுமிமேனன் நடிக்கவிருக்கிறார்.

இலட்சுமிமேனன் ஏற்கெனவே முத்தையா இயக்கிய குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மைக்காலமாக படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இந்தப்படம் மூலம் மீண்டும் நடிக்கவருகிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அவர் கேட்ட சம்பளம் மற்றும் நிபந்தனைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குநர் முத்தையா, இலட்சுமிமேனனை நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

முப்பத்தைந்து இலட்சம் சம்பளம்,இவ்வளவு உதவியாளர்கள் அவர்களுக்கு இவ்வளவு சம்பளம், ஒப்பனை முழுக்க ஏன்னுடைய விருப்பம் ஆகியன உட்பட அவர் போட்ட நிபந்தனைகள் ரொம்ப அதிகம் என்கிறார்கள்.

இதனால் அவரை நீக்கிவிட்டு பிரியாபவானிசங்கரை நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம்.

Related Posts