சினிமா செய்திகள் நடிகை

கமலின் இந்தியன் 2 படத்திலிருந்து நயன்தாரா விலகியது ஏன்?

ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள்.

படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

ஏன் இந்த மாற்றம்?

இந்தப்படத்துக்காக படக்குழு கேட்ட அளவு தேதிகளை ஒதுக்க நயன்தாரா தயாராக இல்லையாம்.

அவருக்கு வரிசையாகப் படங்கள் இருப்பதால் இவர்களுக்குத் தகுந்தாற்போல் தேதி ஒதுக்குவது சிரமம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தேதிகள் மட்டுமின்றி படத்தின் கதைக்கேற்ப தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்வதற்கும் நயன்தாரா தயாராக இல்லையாம்.

இக்காரணங்களாலேயே நயன்தாரா படத்தில் இல்லை என்கிறார்கள்.

அவர் இல்லை என்பதால் அவருக்குச் சம்பளமாகத் தர வேண்டிய சில கோடிகள் படக்குழுவினருக்கு மிச்சம் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts