லைகாவா? சன் பிக்சர்ஸா? – ரஜினி முடிவு என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி உட்பட பலர் நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப்படம் பெரும் வரவேற்பையும் ரஜினிகாந்தின் புதிய கவுரவத்தையும் கொடுத்தது.
அதற்குப் பின் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்துவருகின்றன.
இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இயக்குநர் மணிரத்னமும் இயக்குநர் தனாவும் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் மணிரத்னம் இணையும் இந்தப்படத்தைத் தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதுசம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன என்கிறார்கள்.
இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கடுத்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இப்போது திடீரென் மணிரத்னம் சன்பிக்சர்ஸ் ஆகியோர் குறுக்கே வந்திருப்பதால் ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார்? எந்தப்படத்தில் முதலில் நடிக்கப் போகிறார்? என்பதும் போகப்போகத்தான் முடிவாகும் என்கிறார்கள்.
பார்க்கலாம். என்ன நடக்கப்போகிறதென்று?











