விஸ்வாசம் இயக்குநர் சிவாவின் அடுத்த கதாநாயகன் இவர்தான்
2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.
தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்த படமும் அவருடைய இயக்கத்திலேயே அஜீத் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் சிவா அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்வி எழுவது இயற்கை.
சிவா அடுத்து இயக்கப்போவதும் ஒரு பெரிய கதாநாயகனைத்தான் என்று சொல்கிறார்கள்.
அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது சூர்யாவாம்.
சூர்யா இப்போது செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
அந்தப்படம் முடியும் நிலையில் அல்லது அந்தப்படம் நடக்கும்போதே சிவா இயக்கும் படம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.











