செய்திக் குறிப்புகள்

ராம் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்கும் வி 1

வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளதோடு விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளவர் பாவெல் நவகீதன்.

இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம்
வி 1. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பும் காட்சிக்குக் காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு சிலருக்குக் கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியைப் பார்த்தால் பயம், இரத்தத்தைப் பார்த்தால் பயம் என பலருக்கு பலவகையான பயம் இருக்கும்.

வி 1 படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.
கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் அதிகாரி.

ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறார். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே வி 1 படத்தின் கதை.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு டி.எஸ்.கிருஷ்ணா சேகர்,இசை ரோனி ரப்ஹெல், படத்தொகுப்பு சி.எஸ்.ப்ரேம் குமார்

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ல.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.

Related Posts