திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 51 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா. திரையரங்க உரிமையாளர்கள்
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள














