நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம்.
பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர்













