ஒரு மலைகிராமம், எளியமக்கள், அவர்களுடைய மிக அடிப்படைத் தேவையான மருத்துவ வசதி ஆகியன பொதுப்பார்வையில் மிகச் சின்ன விசயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வலி என்பதையும் இந்தச் சின்ன விசயத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய பெரிய அரசியலையும் அழகாக வெளிப்படுத்தும் படம் நாடு.
‘எங்கேயும் எப்போதும்’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் சரவணன் இப்போது இயக்கியுள்ள படம் நாடு.இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க,மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து













