ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான படம் அடங்கமறு. டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படம் பல போட்டிகளையும் தாண்டி வசூலில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள். இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு
காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம். இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட













