திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா.
தெலுங்கு இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்













