ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா. சொந்த அப்பா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்,இளவரசு,முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 14 மாலை நடைபெற்றது. கனா, இது நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு













