சூர்யா, கார்த்தி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பல அரிய தகவல்களை,
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், நான் கண்ட எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா எஆப்ரல் 14 அன்று நடைபெற்றது.
இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற மூத்த நடிகர்கள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனி விஜயன்,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்புத்தகத்தின் முதல் பிரதியை வி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஏ.சி.சண்முகம் பேசியது….
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மிகத் தீவிரமான ரசிகரான என்னைப் போன்றவர்களுக்கு கற்பூர சுந்தரபாண்டியன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் மிகப்பெரிய விருந்து.
எம்.ஜி.ஆர் மற்றும் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களின் உறவு பற்றி எவ்வளவோ பேசலாம் . எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த பொது ஐஏஎஸ் அதிகாரியாக கற்பூர சுந்தரபாண்டியன் இருந்தார்.
அவர் அவருடைய பணியை முடித்து இரவு வீட்டிற்குச் செல்ல மிகவும் தாமதமாகிவிடும்.இரவு எம்.ஜி.ஆர் அவர்களுடன் உணவருந்திவிட்டுத் தான் அவர் வீட்டிற்குச் செல்வார். எம்.ஜி.ஆர் வீட்டில் உள்ள அடுப்பறையில் எப்போதும் அடுப்பு எரிந்து கொண்டேதான் இருக்கும்.இந்த விழாவை ஏற்பாடு செய்த திரு.இதயக்கனி எஸ்.விஜயன் அவர்களுக்கு நன்றி என்றார்.
கற்பூர சுந்தரபாண்டியன் பேசியது.…
நான் இந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது புரட்சித் தலைவருக்கு நெருக்கமான யாராவது தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.
இப்புத்தகத்தில் புரட்சித் தலைவரைப் பற்றி யாரும் அறியாத பல விஷயங்களைத் தொகுத்துள்ளேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதுரையில் நடந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற பேரணி அணிவகுப்பில் கலந்து கொண்டார்.பேரணி மற்றும் மாநாட்டைத் துவக்கி வைக்க மேடை ஏறும் போது, அங்கே மோர் விற்கும் மூதாட்டி ஒருவரைப் பார்த்தார்.அதை அருகில் இருந்த நானும் பார்த்தேன்.பேரணியில் அணிவிருந்து செல்லும் தொண்டர்களை பார்த்து கையசைக்கும்போது அவர் பின்னால் திரும்பி பார்த்தார் .அந்த இடத்தில அந்த மூதாட்டி இல்லை உடனே அவரிடம் சென்று அந்த மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து வரவா என்றேன் அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்றார் .
அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அந்த மோர் விற்க்கும் பாட்டியை அரை மணி நேரத்தில் அழைத்து வந்தேன் . எம்.ஜி.ஆர் முகத்தில் அவ்வுளவு மகிழ்ச்சி.அந்தப் பாட்டியின் அருகே சென்று அதன் பையில் இருந்த பணம் எவ்வுளவு என்று கூட எண்ணாமல் ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொடுத்தார்.கொடுத்துவிட்டு ஏதாவுது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார்,
அதுதான் எம்.ஜி.ஆர் இதைப் போன்று அவரைப் பற்றி யாருக்கும் தெரியாத, நான் அருகிலிருந்து பார்த்த பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன என்றார்.











