செய்திக் குறிப்புகள்

பாலா சூர்யா இணையும் சூர்யா 41 இன்று தொடக்கம் – விவரங்கள்

என் குருநாதர் பாலா அண்ணனின் ஆக்‌ஷன் எனும் சொல், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கேட்டேன்.மிகவும் மகிழ்ச்சியான தருணம். உங்கள் ஆசிகளை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார் சூர்யா.

அதற்குக் காரணம், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 ஆவது படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ்த்திரையுலகம் காணாத ஒன்றாகும்.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.

Related Posts