சிறை நாயகன் அக்சய்குமாரின் அடுத்தபடம் – விவரம்
சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த படம் சிறை. அப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் எல்.கே.அக்ஷய்குமார்.அவர்,ஒரு புதியபடத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில், எல்.கே.அகசய்குமார், ஜாபர் சாதிக்,நோபல் கே.ஜேம்ஸ்,அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ,ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை பி.எஸ்.ஹரிஹரன் கவனிக்கிறார்.பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும்,கே.அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பொழுதுபோக்குப் படமாகத்((Fun Entertainment) தயாராகும் இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார்.இந்தப்படத்தில் எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 13 ஆவது திரைப்படமான இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்தப் படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.











