October 29, 2025
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி புகார் தர்ஷன் விளக்கம்

திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஷனம் ஷெட்டியும், ‘பிக்-பாஸ்’-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடை பெறவில்லை. எனினும் அவர்கள் இருவரும் ஜோடியாக வெளியே சுற்றினார்கள்.

தற்போது நடிகை ஷனம் ஷெட்டி நடிகர் சிம்பு நடிக்கும் ‘மகா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நடித்த மற்ற மொழி படங்களிலும் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். இதனால் நடிகை ஷனம் ஷெட்டியுடனான காதலை தர்ஷன் முறித்துள்ளார்.

இந்தநிலையில் நடிகர் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக நடிகை ஷனம் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது….

தர்ஷன் இலங்கையைச் சேர்ந்தவர். நான்தான் அவரை மாடலிங் துறைக்கு அழைத்து வந்தேன். அவர் என்னைக் காதலிப்பதாகக் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கூறினார். நானும் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டேன்.

அதன்பின்னர் நாங்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தோம். மிகவும் நெருக்கமாகப் பழகினோம்.

சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்திருக்கிறோம். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் உள்ள என்னுடைய இல்லத்தில் நானும், தர்ஷனும் பல நாட்கள் ஒன்றாகத் தங்கி இருக்கிறோம்.

விருது நிகழ்ச்சிகள், இரவு விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஒன்றாகச் சென்று இருக்கிறோம். சமூக வலைத்தளங்களிலும் நாங்கள் 2 பேரும் நெருக்கமாக இருக்கும் படங்கள், வீடியோக்கள் இருக்கிறது.

பெற்றோர் சம்மதத்துடன் எனக்கும், தர்ஷனுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது கடந்த ஜூன் 10-ந்தேதி திருமண தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் என்னுடைய பரிந்துரையின் பேரில் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தர்ஷனுக்குக் கிடைத்தது. இதனால் அவர் திருமணத்தைத் தள்ளிப்போட்டார்.

அப்போது அவர் என்னிடம், ‘நம்முடைய திருமண செய்தி வெளியில் தெரிய கூடாது. தெரிந்தால் பெண் ரசிகைகள் ஆதரவு எனக்குக் கிடைக்காது. இதனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் என்னால் ஜொலிக்க முடியாது. எனவே நிகழ்ச்சி முடிந்தவுடன் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று கூறினார். நானும் ஏற்றுக்கொண்டு அவரை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஆசையுடன் அனுப்பி வைத்தேன்.

அந்த நிகழ்ச்சியில் அவர் நிறையப் புகழைச் சம்பாதித்தார். நான் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தநிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் தர்ஷன் மாறிவிட்டார். என்னுடன் பேசுவதைத் தவிர்த்தார். நண்பர்களிடையே என்னை அவமானப்படுத்தினார்.

ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். என்னை அவமானப்படுத்துகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “நீ படத்தில் நடிக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை. நடிகர்களுடன் நீ மோசமாக நடிக்கிறாய். தவறான உறவு வைத்துள்ளாய். உன் கேரக்டர் எனக்குப் பிடிக்கவில்லை” என்று கூறி என்னை மனதளவில் காயப்படுத்தினார். உன்னை போன்று ஒரு நடிகை என் வாழ்க்கையில் இருந்தால் என்னால் முன்னேற முடியாது என்றும் கூறிவிட்டார். அவருடைய பெற்றோரிடமும் முறையிட்டேன். அவர்களும் எனக்கு உதவவில்லை.

நான் அவரைக் காதலித்த போதும் நடிகையாகத் தான் இருந்தேன். இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த அவருக்கு பணியாளர் விசாவை நான் தான் வாங்கிக் கொடுத்தேன். அது மட்டுமின்றி அவருக்கு ஆடை செலவு, பயணச் செலவு எல்லாம் நான்தான் செய்தேன். அவருக்கு ரூ.15 இலட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்.

காதலித்து நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த தர்ஷன் மீது மோசடி, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்பட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசிலும் புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1,2020) தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து தர்ஷன் அளித்த விளக்கம்….

நடந்த விசயங்களை விளக்கமாகச் சொல்லத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

நான், 2016 இல் சென்னைக்கு வந்தேன்,ஒரு புரொடக்சன் கம்பேனியில் வேலையைத் தொடங்கினேன். விளம்பரப்படங்களிலும் நடித்தேன்.

பச்சைப்பா சில்க்ஸ் விளம்பரப்படம் எடுத்தபோது தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்,

அதன்பின் மூவீஸ் சார்ந்து எனக்கு சனம் செட்டி நிறைய உதவிகள் செய்துள்ளார்,அதை நான் மறுக்க மாட்டேன்.

போத்தீஸ் விளம்பரத்தில் என் விளம்பரம் நல்ல ரீச் ஆச்சு,அதனால் என்னை விஜய் டிவி தரப்பில் அழைத்தர்கள்.

பிக் பாசில் இருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மாதத்திற்கு என் ஃபேஸ்புக் பக்கத்தை சனம் தான் பயன்படுத்தி வந்தார்.

பைக்கை வித்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தேன்,சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன்.

தற்கொலை செய்து கொள்வேன் என அவர் என்னை மிரட்டினார்.

சனம் வீட்டார்க்கு மட்டுமே நிச்சயம் ஆனது தெரியும்,என் வீட்டிற்கு கண்டிப்பாக அது தெரியாது,காரணம் எனக்கு ஒரு தங்கை இருக்காங்க என்பதால் தான்,

சனம் எனக்கு மூன்றறை இலட்சம் எனக்குக் கொடுத்து இருந்தார்,அதை நான் பிக் பாஸ் பணம் வந்த பின்னர் கொடுத்து விட்டேன்.

பிக் – பாசில் இடையே வெளியே வந்த போது அவர் மற்றொருவருடன் இருந்தார்,அதற்கான் ஆதாரம் உள்ளது,அந்த நபர் யார் என்பதைக் கூற முடியாது.

இதற்கு பின்னர் நான் எப்படி அவருடன் வாழ முடியும்.

அவர் மீது நன்றியுடன் நான் உள்ளேன்,வழக்கு எல்லாம் நான் தொடர மாட்டேன்.

கமிசனர் கேட்டால் வீடியோ,வாய்ஸ் ரெக்காடர் போன்ற ஆதாரங்களைச் சமர்பிப்பேன்.

என்னைப் பொறுத்த வரை அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை, விளக்கம் கொடுக்கத் தான் இந்தச் சந்திப்பு.

எனக்கும் ஒரு தங்கை இருக்காங்க,நான் இதைப் பெரிது படுத்த விரும்பவில்லை,கமிசனர் கேட்டால் விளக்கம் கொடுப்பேன்.

இவ்வாறு தர்ஷன் கூறினார்.

Related Posts