October 29, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் கவின் பஞ்சாயத்தால் கமலுக்குப் பின்னடைவு

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. 

அண்மையில் நிகச்சியிலிருந்து வெளியேறிய கவினை அழைத்து கமல் பேசினார். அவர் பேசிய போது நேரடியாக லாஸ்லியாவிடம் கவின் பேசியவை, அதையொட்டி கமல்ஹாசன் கூறிய பதில் போன்றவை பார்வையாளர்களுக்குக் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கவினுக்காக போடப்பட்ட குறும்படத்தில் சாக்ஷி அகர்வாலுடன் அவர் நெருக்கமாக இருந்த காட்சிகள் காட்டப்பட்டன. 

அப்படி இருந்தவருக்கு எப்படி சில நாடககளிலேயே இன்னொருவர் மீது காதல் ஏற்படும்? இது எல்லாம் எப்படி உண்மையான காதலாக இருக்கும்? இதை வேறு பெருமையாகப் படம் போட்டுக் காட்டுகிறார்கள் என்று பலரும் திட்டிவருகின்றனர்.

இதனால் மக்கள் #RedLightChannelVijayTV என்ற குறிச்சொல் மூலமாக எதிர்ப்புகளைத் தெரியப்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த குறிச்சொல் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இதெல்லாம் ஒரு சில நாட்களுக்குத்தான் அதன்பின் எல்லோரும் வேறு சிக்கல்களைக் கவனிக்கப் போய்விடுவார்கள் என்பது கமலுக்குத் தெரியும்தானே?

Related Posts