November 5, 2025
செய்திக் குறிப்புகள்

நம்பிக்கை உள்ளவன்தான் ஜெயிப்பான் – எஸ்ஏசி அறிவுரை

அறிமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் நாயகனாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.

ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபத்திரத்தில் சௌந்தர்ராஜா நடிக்கிறார்.

மேலும்,வேலராமமூர்த்தி,தலைவாசல் விஜய்,சாய் தீனா, கிச்சா ரவி,சாம்ஸ்,வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்.

டிஎஸ்கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 9) காலை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்,ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில்தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் பேசும்போது….

எனக்கு சினிமாவில் இதுதான் முதல் தயாரிப்பு. வேறு தொழில்கள் எனக்கு இருந்தாலும் இந்தத்தொழிலில் தான் சினிமாவை நம்பி இத்தனை பேர் வாழ்கிறார்களா என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது. நடிகர்கள் என்றாலே ஏசியில் சொகுசாக இருப்பவர்கள் என நினைத்திருந்தபோது, நேரில் பார்க்கும் போதுதான் மழையிலும் வெயிலிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. நடிகர் சௌந்தர்ராஜா இந்தப்படத்திற்காக ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை கடும் உழைப்பைக் கொடுத்து எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டு வருகிறார். குடும்பத்தோடு பார்க்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்தப்பணத்தை மீண்டும் படத்தயாரிப்பிலேயே தான் செலவு செய்வேன். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது….

நான் வாழ்த்துவது பெரிய விஷயம் இல்லை. இந்தப்படம் வெளியான பிறகு தமிழ்நாடு உங்களை வாழ்த்தும்.இந்தப்படத்தின் டிரைலரை பார்த்ததுமே யாருப்பா இந்தப்படத்தின் டைரக்டர் என்று கேட்கத் தோன்றுகிறது. டிரைலர் இன்ட்ரஸ்டிங்காக, புதுசாக இருக்கிறது.படம் பார்க்க தூண்டுவதற்காக தானே டிரைலரை உருவாக்குகிறோம்.டிரைலர் இந்த அளவிற்கு வந்திருக்கு என்றால் அதற்குள் இருக்கும் கரு அந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.சில நேரங்களில் டிரைலரில் கதையை சொல்வது தப்பாகி விடும்.ஆனால் இதில் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது.என்ன நடந்திருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது.
இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் தான் ஃபைனான்ஸ் கிடைக்கிறது.போட்ட பணத்தை எடுத்துவிடலாம். தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்.இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ணவேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து யாராவது படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள்.நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு இங்கே யாரும் பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.
ஒரு புதிய இயக்குநரை நம்பி இரண்டரைக் கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்கிறார் என்றால் அந்த தயாரிப்பாளருக்கு நன்றி.அந்த நம்பிக்கை ஜெயிக்கணும்.ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம்.என் வாழ்க்கை அதுதான்.இப்போது வரை நான் ஜெயிப்பேன் என்றுதான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.நம்பிக்கை உள்ளவன்தான் ஜெயிப்பான்.இந்தப்படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.இன்றைய தலைமுறை வன்முறையைத்தான் இரசிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர்கள் எல்லாம் கத்தி, இரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர கதை இதெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு எழுத்தாளர்தான் நாட்டிலேயே ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts