பிரின்ஸ் பட முன்னோட்ட விழா – விவரங்கள்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிரின்ஸ்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொள்ளும் இந்த முன்னோட்ட விழாவை, சத்யபாமா கல்லூரி வளாகத்தில் வைத்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டான் படத்தின் முன்னோட்ட விழா அங்குதான் நடந்தது. அந்தப்படம் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றிபெற்றது.
எனவே, இந்தப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டுவிழாவையும் அங்கேயே நடத்தத் திட்டமிட்டு அதன்படி இன்றுமாலை விழா நடக்கவிருக்கிறது.










