செய்திக் குறிப்புகள்

மாரீசன் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்த்தாக வேண்டும் ஏன்?

வி.கிருஷ்ணமூர்த்தி கதை,திரைக்கதை,வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,சித்தாரா, பி.எல்.தேனப்பன்,லிவிங்ஸ்டன், ரேணுகா,சரவணா சுப்பையா,’ஃபைவ் ஸ்டார்’கிருஷ்ணா,ஹரிதா,டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புஒ பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார்.

கிராமியப் பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில்
ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 98 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படம் ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் குறு முன்னோட்டம் பல இலட்சக்கணக்கில் பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பை விட இதற்கு அனைத்துத் தரப்பு இரசிகர்களிடத்தில் இருந்தும் பேராதரவு கிடைத்து வருகிறது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்தப் படத்திற்கான முனோட்டத்தில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன.இப்படத்தில் பகத்பாசில் ஏற்றிருக்கும் வேடமும் வடிவேலு ஏற்றிருக்கும் வேடத்தில் அவருடைய ஆகச் சிறந்த நடிப்பும் படத்தைப் பெரிய அளவில் பேச வைக்கப்போகிறதெனெ படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் இப்படத்தை முதல்நாள் முதல்காட்சியில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தைப் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் படக்குழுவினர் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Posts