செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படவிழாவுக்கு வர இதுதான் காரணம் – கமல் பேச்சு

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார். 

இவ்விழாவினில் படத்தின் நாயகி அனுகீர்த்தி பேசியதாவது…..

டிஎஸ்பி தான் எனது முதல் படம், இந்தப்படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. விஜய்சேதுபதி சார் போன்ற ஒரு நடிகருடன் திரையைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். இமான் சார் இசையில் நான் நடித்திருப்பது பெரிய சந்தோசம். தொழில்நுட்பக் குழுவின் கடின உழைப்பினால் இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் டிசம்பர் 2 வெளியாகவுள்ளது, படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…..

விஜய்சேதுபதி எப்பொழுதும் ஆச்சர்யத்தைத் தரக்கூடிய நபர். அவருடைய படவிழாவிற்கு வந்ததே எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்தப் படத்தின் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இமானுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படமும், பாடலும் கண்டிப்பாக வெற்றியடையும் அதற்கு எனது வாழ்த்துகள். பொன்ராம் சிறந்த மனிதநேயமிக்க நபர். இவர்களால் இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். வாழ்த்துகள் என்றார்.
 
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…….

இந்தத் திரைப்படவிழாவிற்கு வந்து வாழ்த்துத் தெரிவித்த திரு.கமல்ஹாசான் அவர்களுக்கு நன்றி, மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து இரசிக்கும்படியான கதை. விஜய்சேதுபதி மிகச்சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளார்கள். இயக்குநர் மிகச்சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன், நன்றி என்றார்.
 
இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…..

விஜய் சேதுபதி மிகச்சிறந்த மனிதர். அவரால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும்படியாக குடும்பத்தோடு இரசிக்கும்படியாக இருக்கும். படப்பிடிப்பு மிக சந்தோசமாக நடந்தது. படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து எனக்கு முழு சுதந்திரம் தந்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. படத்தில் அனைத்துக் கலைஞர்களும் மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளார்கள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார். 

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது…….

நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாகச் செய்வதில்லை. இயக்குநர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இந்தப்படம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதைப் புதுமையாகச் செய்ய நினைத்தாலும் அதற்குப் பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி என்றார்.  

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது……

நான் இங்கு வந்தது விஜய்சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத் தான். என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி. நாளை விஜய்சேதுபதியின் சாதனையைப் போற்றும் நடிகர்கள் வருவார்கள், அது தான் சினிமாவின் சுழற்சி. இந்தப்படத்தில் உழைத்துள்ள அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Posts