சினிமா செய்திகள்

இனி தயாரிப்பு இல்லை – கமல் 237 படம் கைவிடப்பட்டது?

நடிகர் கமலின் 234 ஆவது படம் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப்.235 ஆவது படமாக தெலுங்குநடிகர் பிரபாஸின் கல்கி யும், 236 ஆவது படமாக இந்தியன் 3 ஆகியவை இருக்கின்றன.

கமலின் ‘237’ ஆவது படம் குறித்த அறிவிப்பு 2024 சனவரி 12 அன்று வெளியானது.அந்த அறிவிப்பில், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

அந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது.

இப்போது, கமல் தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார்.உடனே அமெரிக்கா சென்றிருக்கிறார்.அங்கு சில மாதங்கள் இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அங்கிருந்து திரும்பி வந்ததும், பிரபாஸ் உடன் கல்கி படத்தின் இரண்டாம்பாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

சுமார் இரண்டு மாதங்கள் அந்தப் படப்பிடிப்பில் அவர் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து அன்பறிவ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும்.அந்தப்படத்துக்காக அலுவலகம் அமைத்து படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா போகுமுன்பு கமலை அன்பறிவ் இரட்டையர்களில் ஒருவர் கமலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது படப்பிடிப்பு தேதி குறித்து கலம் சொல்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.ஆனால், அதுகுறித்து உறுதியாக எதுவும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டாராம்.

இதனால்,இந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள் உலாவரத் தொடங்கிவிட்டன.

அதற்குக் காரணம், கமல் நடிக்கும் இந்தியன் 3, கல்கி 2, தக் லைஃப் ஆகிய படங்கள் அகில இந்தியப் படங்களாக இருக்கின்றன.அதனால் வியாபாரம் மற்றும் கமலின் சம்பளம் ஆகியன பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.இப்போது அட்லி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருக்கும் படத்தில் கமலும் இருக்கிறார் என்றொரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.இதுவும் அகில இந்தியப் படமாகவே இருக்கும்.

தற்போதைய நிலை இப்படி இருக்கும்போது அன்பறிவ் இயக்கும் படம் தமிழ்ப்படமாக மட்டுமே இருக்கும் என்பதால் இதைக் கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு இனி ராஜ்கமல் நிறுவனம் நேரடியாகப் படத்தயாரிப்பில் இறங்காது என்றும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தரப்பில் கேட்டால், அன்பறிவ் இயக்கும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.எப்போது படப்பிடிப்பு என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts