October 29, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்கள் இருந்தனர்.

அந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அப்போது அது ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

இறுதியில் முகேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடம் பிடித்தார்.

ஆனாலும் அவர்களுகெல்லாம் கிடைக்காத நல்வாய்ப்பு தர்ஷனுக்குக் கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி.

தெரியாத செய்தி என்னவென்றால்,

கமலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும்  படங்களில் தர்ஷன் நாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.

படத்திலா? படங்களிலா? என்றால் தர்ஷனை வைத்து ஒன்றல்ல மூன்று படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இப்போது சொல்லுங்கள் தர்ஷன் அதிர்ஷ்டக்காரர்தானே?

Related Posts