சினிமா செய்திகள்

ஃபிஜி அரசின் புதியசட்டம், பாதிப்பில் தமிழ்ப்படங்கள் – ஆச்சரிய செய்தி

பிஜி குடியரசு என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின்தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இத்தீவின் அருகிலுள்ள அயல் நாடுகள்: மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா, பிரான்சின் வலிசும் புட்டூனாவும், வடக்கே துவாலுஆகியவை அமைந்துள்ளன.

18 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தத் தீவில், திரைப்படங்களின் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தினால் படத்தின் மொத்தச் செலவில் ஐம்பது விழுக்காடு ஃபிஜி அரசு தரும். ஃபிஜியின் சுற்றுலா வருவாயைப் பெருக்க அவ்வரசு செய்யும் விளம்பரச் செலவே இத்திட்டம்.

இதற்காக அந்த அரசு விதித்துள்ள நிபந்தனைகளில்,

படத்தின் மொத்தச்செலவைக் கணக்கிட்டு அந்தத் தொகையை ஃபிஜியிலுள்ள வங்கியில் போட்டு வைத்து, எல்லாப் பணப் பரிவர்த்தனைகளையும் அந்த வங்கி மூலமே செய்யவேண்டும்.

படத்தை முழுமையாக முடித்து தணிக்கைச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பிக்க வேண்டும்

ஆகியன முதன்மையானவை.

இதை அறிந்தவர்கள், மூன்று கோடி ரூபாய் செலவு பிடிக்கும் படத்துக்கு ஆறு கோடி என்று சொல்லி, வட்டிக்கு வாங்கியேனும் ஆறு கோடியை அங்குள்ள வங்கியில் போட்டு வைப்பார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்புக்கான செலவு என்று அங்கிருந்து பணத்தை எடுப்பார்கள், ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெற்று விடுவார்கள்.

தணிக்கைச் சான்றிதழைக் காட்டியதும் ஃபிஜி அரசு மூன்று கோடி கொடுத்துவிடுவார்கள்.

ஆறு கோடி செலவு என்று சொல்லிவிட்டு ஒரு கோடியிலேயே படத்தை முடிப்பார்கள். 13 ரீல் உள்ள ஒரு படம் வேண்டும் என்பதால், ஒரு காட்சியில் நாயகன் பைக் ஓட்டுகிறாரென்றால் ஒரு ரீலுக்கு அவர் அதையே ஓட்டிக்கொண்டிருப்பார். இதனால் குறைந்த செலவில் முழுநீளப்படம் தயாரித்துவிடலாம். தணிக்கைச் சான்றிதழ் பெற்றால் போதும் , படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்பது நல்வாய்ப்பு.

தமிழின் முன்னணி இயக்குநர் ஒருவர் இவ்விசயம் அறிந்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இதைச் சொல்லி சத்தமில்லாமல் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்போது ஃபிஜி அரசு பிறப்பித்துள்ள அரசாணை இதற்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

அவ்வரசு, படத்தை எடுத்து தணிக்கைச் சான்று பெற்றால் மட்டும் போதாது, இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் படத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதாம்.

இதனால் படத்தை வெளியிட்டாக வேண்டிய அவசியம், வெளியிடுவதென்றால் தரமாகத் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஆகியன இருப்பதால் இனி ஏமாற்ற முடியாது என்கிற நிலை.

இந்தச் சிக்கலால் தற்போது தயாராகியிருக்கும் ஒரு படம் உட்பட சில படங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறதாம்.

ஒரு தயாரிப்பு நிறுவனம் முறையாகத் திட்டமிட்டு சரியாகப் படமெடுத்தால் இப்போதும் ஃபிஜி அரசின் திட்டத்தால் பயனடையலாம் என்கின்றனர்.

Related Posts