September 3, 2026
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் பட நாயகி மற்றும் நடிகர்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சனவரி 27 காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது.

அதன்படி…

இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இந்தப்படத்துக்கு டான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

டான் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 3) அப்படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் வெளீயாகின.

அதன்படி, படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.டாக்டர் படத்திலும் இவர்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.நகைச்சுவை வேடத்தில் சூரியும் முக்கிய வேடங்களில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts