October 25, 2025
கட்டுரைகள்

அட்லீ விஜய் கூட்டணியால் படத்தை இழந்த 6 இயக்குநர்கள்

மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம்.

சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா,

சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம்,

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம்,

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்,

ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் படம்

இவைதவிர தனுஷ் நடிக்கும் ஒரு படம் என 7 படங்களைத் தயாரிக்கத் திட்ட்மிட்டிருந்தது அந்நிறுவனம்.

ஆனால் மெர்சல் படத்தில் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. அப்படத்துக்காக ஒதுக்கிய தொகையைவிடப் பல மடங்கு அதிகச் செலவு செய்துவிட்டாராம் இயக்குநர் அட்லீ.

இதனால் படத்தின் வியாபாரத்தின்போது பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அவற்றைத் தாண்டி படத்தை வெளியிட்டார்கள். பாஜகவின் புண்ணியத்தால் படத்துக்குப் பெரிய கவனமும் நல்ல வசூலும் கிடைத்தது.

ஆனாலும் கடைசியாகக் கணக்குப் பார்த்ததில் சுமார் 35 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே அடுத்தடுத்து தயாரிக்கப்போவதாகச் சொன்ன படங்களை அப்படியே நிறுத்திவிட்டதாம் தேனாண்டாள் நிறுவனம்.

வாங்கி வெளியிடுவதாக ஒப்புக்கொண்டிருந்த டிக்டிக்டிக் போன்று சில படங்களையும் எங்களால் வெளியிட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டதாம்.

இப்போது தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை மட்டும் தயாரிப்பது என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

திரைப்படம் என்பது இயக்குநர்களின் மீடியம். அவர்தான் கேப்டன் ஆஃப் தி ஷிப்.

அட்லீ என்கிற ஒரு இயக்குநர் செய்த தவறால் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது.

ஆறேழு இயக்குநர்கள் வெகு அருகிலிருந்த அடுத்த படவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

Related Posts