Uncategorized

தோட்டா பாயுற நேரம் வந்திருச்சி – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம்மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.

இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில், ஓரிரு நாட்களீல் படம் தணிக்கை செய்யப்பட்டுவிடும்.காத்திருப்புக்கு ஏற்ற சிறந்த படமாக இருக்கும் என்று அவர் கூறீயிருக்கிறார்.

படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டால் விரைவில் வெளியாகிவிடும். எனவே தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

தோட்டா பாயுற நேரம் வந்திருச்சி என்று உற்சாகமாக ட்வீட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Related Posts