October 29, 2025
செய்திக் குறிப்புகள்

தனுஷுடன் இணைந்த அதிதிராவ் – ஜெயில் பட சிறப்பு

அங்காடித் தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலன்.

இவர் இப்போது ஜி.வி பிரகாஷ் குமார்,அபர்நதி,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் ஜெயில் படத்தை இயக்கியிருக்கிறார்.

வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தியவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இந்தப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.இந்தப்படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.

படத்திற்குச் சிறப்புச்சேர்க்கும் வகையில் தனுஷ்,அதீதி ராவ் ஆகியோர் காத்தோடு காத்தானேன் என்ற பாடலைப் பாடியுள்ளார்கள்.கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.

தனுஷ்,ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்அசுரன் படத்திற்குப் பிறகு இசையில் இணைந்துள்ளனர்.

இந்தப்பாடலை ஜூன் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர்.

தயாரிப்பு மேற்பார்வை பி.டி.செல்வகுமார்,ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா,பாடல்கள் கபிலன்,இசை ஜி.வி.பிரகாஷ் குமார்,கதை,திரைக்கதை,வசனம் , இயக்கம் வசந்தபாலன்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறார்கள். விரைவில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலை செய்துவருகிறார்கள்.

Related Posts