தனுஷ் 41 படப்பிடிப்பு தொடங்கியது
தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார்.
அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் கிடைத்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது.
அங்கு இருபத்தைந்து ஏக்கரில் பெரிய செட் போட்டு அதில் முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படத்துக்குக் கர்ணன் என்று பெயர் வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.











