சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி ரசிகரா நீங்கள்? – இதைப் படியுங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள். அந்நிகழ்ச்சி பெரிய வெற்றி என்பதால்தான் அதேபோன்றதொரு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் அந்நிகழ்ச்சி குறித்த கடுமையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

ரேஷ்மி பச்சை என்பவர் முகநூலில் எழுதியுள்ள பதிவில்…

அந்நிகழ்ச்சியில், கறுப்பு என்றால் அசிங்கம் கிராமத்துப்பெண் என்றால் முட்டாள். இப்படிப்பட்ட சித்தரிப்புகளை உள்ளடக்கிய அருக்காணி கதாபாத்திரத்தை காட்டினாலே மக்கள் சிரிப்பார்கள் என்ற சீப்பான மனநிலை குக்வித்கோமாளி குழுவினருக்கு உள்ளது வருத்தமளிக்கிறது.

ரொம்ப நாளா என்ன உறுத்துற ஒரு விஷயம் Cook with comali… இந்த ஷோ பெயரே எனக்கு முரணா தோணும்.. சரி என்ன தான் பண்றாங்கன்னு பாக்கலாம் னு 2 ஷோ பாத்தேன்…. முற்றிலும் முரண் தான் தெரியுது… அதிகப் படியான body shaming,racism ஜோக்ஸ்… இத முற்போக்காளர்களும் உணராம கொண்டாடுறாங்க. Depression போகுது மைன்ட் பிரீ ஆகுதுன்னு நெனைச்சா நீங்க அறியாமை என்னும் அரை ஒளில பார்க்குறிங்க உலகத்தை…ஒரு தரப்பை மன அழுத்ததில் இருந்து விடுவிக்க ஏற்கனவே ஒடுக்கப்பட்ட ஒரு தரப்பை மேலும் புண்படுத்தி மன அழுத்தத்தை உருவாக்குவது என்ன நியாயம்… அது நிச்சயம் சரியானதா இருக்க முடியாது… பெரியவர் முதல் சிறியவர் வரை பாக்குற கொண்டாடுற ஒரு content அ காலத்திற்கு ஏற்ற போல வடிவமைக்கப்பட வேண்டும்…அடுத்தவன் கலர், உடல் வடிவமைப்ப கேலிக்கு உட்படுத்தி சிரிக்குறது பெயர் #SADIST

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

இதுதவிர அந்நிகழ்ச்சி குறித்து இன்னும் பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Related Posts