பிக்பாஸ் 4 குழுவின் குழப்பமும் அச்சமும் – அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் நடந்த விவாதங்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது.
கடந்த மாதம் பிக்பாஸ் 4 ஆவது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நேற்று (ஸெப்டெம்பர் 24) மாலை விஜய் தொலைக்காட்சி வெளீயிட்டுள்ள அறிவிப்பில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னதாக, பிக்பாஸ் 4 தொடங்கும் தேதி அறிவிப்பில் பெரும் விவாதம் நடந்திருக்கிறது. அக்ட்டொபர் 4 ஆம் தேதி ஒன்றுக்கு இரண்டாக ஐபிஎல் போட்டிகள் இருக்கின்றன.
ஒரு போட்டி என்றால் இரவு ஏழரைக்குத் தொடங்கும். இரண்டு போட்டிகள் என்பதால் மாலை மூன்றரை மணிக்கு ஒரு போட்டி மற்றும் ஏழரைக்கு வழக்கமான போட்டி என இரண்டு போட்டிகள் இருக்கின்றன.
இதனால் அந்தத் தேதிக்குப் பதிலாக ஒருநாள் தள்ளி அக்டோபர் 5 ஆம் தேதி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியைத் தொடங்கலாம் என்கிற பேச்சுகள் நடந்துகொண்டிருக்கும் போதே, அக்டோபர் 4 என்று சொல்லி எடுக்கப்பட்ட விளம்பரங்கள் இணையதளங்களில் பரவத் தொடங்கிவிட்டதாம்.
விளம்பரப்படத்தை மாற்றி எடுப்பதற்கு முன்பாக அது வெளியாகிவிட்டதால் அதுவே இருக்கட்டும் என்று மேலதிகாரிகள் முடிவு செய்துவிட்டார்களாம்.
எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறும் இந்நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் தொடங்கவிருக்கிறது. அந்நேரம் மூன்றரை மணிக்குத் தொடங்கும் மட்டைப்பந்து போட்டியின் இறுதி நேரமாக இருக்கும்,அதை விட்டுவிட்டு இரசிகர்கள் இதற்கு வரமாட்டார்கள் என்பதால் தொடங்கும்போதே வரவேற்பு இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் பிக்பாஸ் குழு இருக்கிறதாம்.











