சினிமா செய்திகள்

திடீரென குறுக்கிட்ட வெற்றிமாறன் அதிர்ச்சியில் அட்லி

புகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான்.

அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

முன்னதாக இயக்குநர் அட்லீ, ஷாரூக்கானை நாயகனாக வைத்து சங்கி என்ற படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான அறிவிப்பு ஷாரூக்கானின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல் அசுரன் படத்தைப் பார்த்த ஷாரூக்கான் அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

வெற்றிமாறன் தற்போது சூரியை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியுள்ளது.ஆனாலும் ஷாருக்கான் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கே முன்னுரிமை கொடுப்பார் என்பதை மறுப்பதற்கில்லை.

இதனால் அட்லி அதிர்ச்சியடைந்திருப்பார். ஷாருக்கின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கே கிடைக்கும் என்று அவர் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெற்றிமாறன் குறுக்கே வந்ததில் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்றே சொல்கிறார்கள்.

Related Posts