October 29, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் அஜீத் பட பாடல் – பெருமை கொள்ளும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய ஒளிபரப்பில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா, கஸ்தூரி உள்ளிட்டவெளியேற்றப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, பிக் பாஸ் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை போட்டியாளர்களுக்கு புகைப்படங்களாகக் காண்பித்து, அதில் தங்களது மகிழ்ச்சியான தருணம் எது? என்று பிக்பாஸ் கேட்டார்.

அதற்கு போட்டியாளர்களும், தங்களது பதில்களை அளித்த நிகழ்வு சுவாரசியமாக இருந்தது.

அதோடு, சூப்பர் சிங்கர் பிரபலங்கள் மூலம் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அதில்,அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற, கண்ணாணே கண்ணே பாடல் பாடப்பட்டது. அதைக்கேட்டு, மோகன் வைத்யா மற்றும் மிரா மிதுன் உள்ளிட்ட சிலர் அழுதுவிட்டனர்.

இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

அஜீத் ரசிகர்கள் இதைப் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts